ஹர்த்தாலால் முடங்கியது யாழ். நகரம்! – வர்த்தகர்கள் ஆதரவு!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு யாழ்.மாட்டத்திலுள்ள வர்த்தக சமூகம் இன்று (பெப்ரவரி 4) ஆதரவு தெரிவித்து பூரண ஹர்த்தாலை கடைப்பிடித்துள்ளது.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ் பல்கலை மாணவர்கள் நேற்று (பெப்ரவரி 3) ஹர்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

யாழ்.நகரம் உட்பட மாவட்டத்திலுள்ள சகல நகரங்களிலும் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு ஹர்த்தாலுக்கு வர்த்தக சமூகம் ஆதரவு தெரிவித்துள்ளது.

யாழ்.நகரிலிருந்து இடம்பெறும் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை. இ.போ.ச சேவைகள் மட்டுமே இடம்பெற்றுவருகின்றது.

இதனால் நகரப் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைவடைந்து காணப்படுகின்றது.

Share this Article