விரைவில் திறக்கப்படவுள்ள யாழ் பல்கலைக்கழகத்துக்கான புதிய மருத்துவ பீட கட்டடம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்காக யாழ் நகரில் புதிதாக கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பிரிவு கட்டடம் உத்தியோகபூர்வமாக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது.

அதன் முதல் அம்சமாக புதிய கட்டடத்துக்கான “சாந்தி பூஜை” நேற்றுமுன்தினம் (நவம்பர் 23) நடைபெற்றது.

அதனை தொடர்ந்து, நேற்று வெள்ளிக்கிழமை சமய சம்பிரதாய பூர்வமாக அக்கட்டடத்தில் பால் காய்ச்சப்பட்டது.

இதன்போது, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜா, பல்கலைக்கழக பீடாதிபதிகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் கல்விப் பணிப்பாளர்கள், ஆலோசகர்கள் உட்பட பல்வேறு முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Share this Article