விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பயனின்றி உயிரிழப்பு!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த 20 வயது இளைஞர் ஒருவர் சிகிச்சை பயனின்றி நேற்றுக் காலை (பெப்ரவரி 12) உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி, கதிரிப்பாயைச் சேர்ந்த விஜயரட்ணமூர்த்தி விபுசன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 6 ஆம் திகதி மட்டுவில் – புத்தூர் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர் வீதியில் கொண்டு செல்லப்பட்ட கம்பிக்கூட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். அவர் மயக்கமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அவருக்குச் சிகிச்சைகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமாரன் மேற்கொண்டார்.

Share this Article