விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு!!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 29 வயது இளைஞர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பளை, குரும்பசிட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் சயந்தன் (வயது-29) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இவருக்கு திருமணமாகி இரு மாதங்களே ஆகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து கடந்த மாதம் 7 ஆம் திகதி நடந்துள்ளது. கொடிகாமம் – மட்டுவில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து நடந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பயனின்றி நேற்றுமுன்தினம் மாலை உயிரிழந்துள்ளார்.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.

விபத்துத் தொடர்பான விசாரணைகள் சாவகச்சேரி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Share this Article