வலி­கா­மம் வடக்­கில் 108 ஏக்­கர் காணி படை­க­ளி­ட­மி­ருந்து நாளை விடு­விப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வடக்­கில் காணி­களை விடு­விக்­க­வேண்­டாம் என்ற மகா­நா­யக்­கர்­க­ளின் எதிர்ப்­பை­யும் மீறி வலி. வடக்­கில் 108 ஏக்­கர் காணி நாளை (பெப்ரவரி 2) பாது­காப்­புத் தரப்­பால் யாழ். மாவட்­டச் செய­ல­கத்­தி­டம் ஒப்­ப­டைக்­கப்படவுள்ளது.

பலாலி அன்­ர­னி­பு­ரத்­தில் இதற்­கான நிகழ்­வு­கள் ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இரா­ணு­வத்­தி­ன­ரி­ட­மி­ருந்து காங்­கே­சன்­துறை மத்­தி­யில் (ஜே/234) வெளிச்­ச­வீட்­டி­லி­ருந்து துறை­மு­கம் வரை­யி­லான பிர­தே­சத்­தில் 40 குடும்­பங்­க­ளுக்­குச் சொந்­த­மான 26 ஏக்­கர் காணி­யும், அதே கிராம அலு­வ­லர் பிரி­வில் இரா­ணு­வத்­தின் பொறி­யி­யல் பிரிவு அமைந்­துள்ள 24 ஏக்­கர் காணியும் விடு­விக்­கப்­ப­டவுள்ளன. இவை 45 குடும்­பங்­க­ளுக்­குச் சொந்­த­மா­னவை.

மயி­லிட்டி வடக்கு (ஜே/246) கிராம அலு­வ­லர் பிரி­வில் 17 குடும்­பங்­க­ளுக்­குச் சொந்­த­மான 16 ஏக்­கர் காணி­யும், பலாலி வடக்கு அன்­ர­னி­பு­ரத்­தில், பருத்­தித்­து­றை­யில் தங்­கி­யுள்ள இடம்­பெ­யர்ந்த மக்­களை மீளக் குடி­ய­மர்த்­து­வ­தற்­காக 13 ஏக்­கர் காணி­யும் விடு­விக்­கப்­ப­ட­வுள்­ளன.

நகு­லேஸ்­வ­ரம் (ஜே/226) இல் 20 குடும்­பங்­க­ளுக்­குச் சொந்­த­மான 20 ஏக்­கர் காணி­யும் நாளை ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வுள்­ளது.

Share this Article