வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய ஆளில்லா படகு!- பொலிஸார் தீவிர விசாரணை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு பொற்பதி கடற்பரப்பில் ஆளில்லா படகு ஒன்று நேற்று (டிசம்பர் 10) கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த படகு கரையொதுங்குவதை கண்ட பிரதேச கடற்றொழிலாளர்கள் பருத்தித்துறை பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்ததுடன், படகை கரையேற்றியுள்ளனர்.

குறித்த படகு இலங்கை கடற்றொழிலாளர்கள் பயன்படுத்துவது இல்லை என்றும், இது இந்திய கடற்றொழிலாளர்களின் படகாக இருக்கலாம் எனவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article