வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராக குயின்ரஸ் நியமனம்

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராக ரி.ஜோன் குயின்ரஸ் வடக்கு மாகாணப் பிரதம செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

1986 ஆம் ஆண்டு சென். பற்றிக்ஸ் கல்லுரியில் ஆசிரியராக இணைந்து கொண்ட குயின்ரஸ் பாடசாலை அதிபராகவும், அதன் பின்னர் பலாலி ஆசிரிய கலாசாலையின் அதிபராகவும் செயற்பட்டார்.

பின்னர் உதவிக் கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர், தீவகம் ,மடு துணுக்காய், கிளிநெச்சி ஆகிய பகுதிகளில் வலயக் கல்விப் பணிப்பாளராகச் செயற்பட்டார். 2013 ஆம் ஆண்டு இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் ஒன்று அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.

வடக்கு மாகாண கல்வி அபிவிருத்தி, திட்டமிடல், நிர்வாகம் ஆகிய வற்றின் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளராக பதவி வகித்த நிலையில் தற்போது வடக்கு மாகாண கல்வி பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

Share this Article