யாழ்ரன் கல்லூரியில் காலநிலை மாற்றம் தொடர்பான கல்வி முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சுற்றுச் சூழல் தொடர்பான கல்வி முகாம் காரைநகர் யாழ்ரன் கல்லூரியில் நடத்தப்பட்டுள்ளது. Forut Friends அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த கல்வி முகாம், பாடசாலை அதிபர் தி.மதிவதனன் தலைமையில் நடைபெற்றது.

மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் தொடர்பான விரிவுரைகளை வளவாளராக கலந்து கொண்ட ம.சசிகரன் வழங்கி இருந்தார்.

மாணவர்கள் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டு சுற்றுச்சுழல் தொடர்பான தங்கள் கேள்விகளுக்கு விளக்கங்களைப் பெற்றுக்கொண்டனர்.

பயிற்சி முகாமில் கலந்துகொண்ட மணவர்களுக்குப் பயன் தரும் மரக் கன்றுகளும் வழங்கப்பட்டதுடன், பாடசாலை வளாகத்தில் மரநடுகையும் முன்னெடுக்கப்பட்டது.

Share this Article