யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் நலன்புரிக் கழகத்தால் நடத்தப்படும் வருடாந்த தைப் பொங்கல் நிகழ்வு இன்று (ஜனவரி 16) யாழ்ப்பாணம் மாவட்டச் செயகல முன்றலில் நடைபெற்றது.

நலன்புரிந் சங்கத்தின் தலைவர் நிர்மல் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட பதில் மாவட்டச் செயலர் ம.பிரதீபன் உட்பட மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் கருத்துத் தெரிவித்த மாவட்ட பதில் மாவட்டச் செயலர் ம.பிரதீபன், தமிழர்களுடைய பண்பாடு, விழுமியங்களை எடுத்தியம்பும் வகையில் இந்த தைப்பொங்கல் நிகழ்வு அமைந்துள்ளது என்று தெரிவித்ததுடன், அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் தைப் பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Share this Article