யாழ். மாநகர துறை சார் அதிகாரிகளுடன், யுஎஸ் எயிட் அதிகாரிகள் சந்திப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் தலைமையிலான மாநகர துறைசார் அதிகாரிகள் குழுவுக்கும், யுஎஸ் எயிட் நிறுவத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று கடந்த 14ஆம் திகதி யாழ்ப்பாணம் மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் மாநகர சபையின் திண்ம மற்றும் திரவக் கழிவகற்றல் முறைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது மாநகர சபையால் முன்னெடுக்கப்பட்டு வரும் கழிவு முகாமைத்துவத்தின் நடைமுறை தொடர்பாகவும், மாநகர சபையின் பொறிமுறை தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.

யாழ்ப்பாண மாநகர திண்ம மற்றும் திரவ கழிவு முகாமைத்துவத்தை மேலும் திறம்பட மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பாக யுஎஸ் எயிட் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

Share this Article