யாழில் சுதந்திர தின முன்னாய்த்தக் கலந்துரையாடல்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

75 ஆவது தேசிய சுதந்திர தின விழா தொடர்பான முன்னாய்த்தக் கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று (ஜனவரி 17) நடைபெற்றது.

யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலாச்சார ரீதியிலான ஆரம்ப வரவேற்பு நிகழ்வுகள், வரவேற்பு நிகழ்வுக்கான ஆரம்ப ஒத்திகை ஏற்பாடுகள், வீதி ஒழுங்கமைப்பு, சாரணர் அணிவகுப்பு, மற்றும் இதனுடன் தொடர்புடைய இதர விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

யாழ்ப்பாணப் பழைய பூங்காவிலிருந்து ஆரம்பித்து யாழ்ப்பாண மாவட்ட செயலக முன்றலில் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இக் கலந்துரையாடலில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), 51 ஆவது படைப்பிரிவு இராணுவக் கட்டளைத் தளபதி, மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், துறை சார் உத்தியோகத்தர்கள், பரியோவான் கல்லூரி மாணவர்களுக்கான பொறுப்பதிகாரி மற்றும் சாரணர் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share this Article