முன்பள்ளிச் சிறுவர் கல்வி மேம்பாடு தொடர்பில் கலந்துரையாடல்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கல்விக் கோட்டத்துக்கு உட்பட்ட முன்பள்ளிகளை சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பின் நிகழ்சித் திட்டத்தில் இணைத்துக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (பெப்ரவரி 9) நடைபெற்றது.

நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பு முன்பள்ளி சிறார்களின் கல்வி பணியில் முன்னெடுத்திருந்த செயற்திட்டங்கள் தொடர்பாகவும் நெடுந்தீவில் முன்னெடுக்கவுள்ள செயற்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

பிரதேச செயலக நிதி உதவியாளர் திருமதி ச. நாகநந்தினி தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பின் தலைவர் எ.சத்தியமூர்த்தி மற்றும் முன்பள்ளிகளின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Share this Article