நெடுந்தீவில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய பல நிறுவனங்களில் திடீர் சோதனை.!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இயங்கிவரும் சில்லறை விற்பனை பலசரக்குக் கடைகள் , உணவகங்கள், விருந்தகங்கள், வெதுப்பகங்கள் மீது வேலணை சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினர் அதிரப் பாய்ச்சலில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பலநிறுவனங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

வேலணை சுகாதார வைத்திய அதிகாரி , மேற்பார்வை பொது சுகாதாரப் பரிசோதகர் மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட களப் பரிசோதனையின் போது, பல நிறுவனங்கள் கடுமையான சுகாதாரக் குறைபாடுகள் நிலவுவது கண்டறியப்பட்டதுடன் பல கலாவதியான பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொது சுகாதாரப் பரிசோதகர் மற்றும்அதிகாரிகளால் ஏற்கெனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டபோதும் இப்பரிசோதனையின்போது அவை சீர்செய்யப்படாமையால் அவற்றினை சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தவுள்ளதாகவம் தெரியவருகின்றது.

Share this Article
Leave a comment