போதை மாத்திரைகளுடன் ஆணும் பெண்ணும் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம், புன்னாலைக் கட்டுவனில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் நேற்று(ஜனவரி 11) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 400 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன என்றும், 18 வயதுடைய ஆணும், 25 வயதுடைய பெண்ணுமே கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் காங்கேசன்துறை விசேட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

காங்கேசன்துறை விசேட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், அவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article