பலாலியில் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு நட்டஈடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கு காணி சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கான நட்ட ஈட்டு தொகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நட்ட ஈட்டைப் பெறும் காணி உரிமையாளர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நட்ட ஈட்டைப் பெறுவோர் காணி உறுதிப் பத்திரம், தோம்பு, வங்கி கணக்கு புத்தகம், தத்துவ உரித்தாளர் சத்தியக்கடுதாசி முடித்த படிவம் , தேசிய அடையாள அட்டை என்பவற்றுடன் சமூகமளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article