பருத்தித்துறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் 30 பேர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பருத்தித்துறை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ள விஷேட போதை ஒழிப்பு நடவடிக்கையின் போது 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாடளாவிய ரீதியில் விசேட போதைப்பொருள் ஒழிப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் கடந்த 17 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஹெரோயின் போதைப் பொருளுடன் 16 பேரும், கசிப்புடன் 04 பேரும், கஞ்சாவுடன் இருவரும், போதை மாத்திரைகளுடன் இருவருமாக மொத்தம் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article