பரீட்சை எழுதும் மாணவியின் எதிர்காலத்தில் விளையாடிய மின்தடை!!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவி ஒருவரின் அனுமதி அட்டை மற்றும் அடையாள அட்டை என்பன நேற்று இரவு ( ஜனவரி 24) தீயில் எரிந்து நாசமாகியுள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

மின்தடை காரணமாக மாணவி குப்பி விளக்கில் படித்துக் கொண்டிருந்த போது விளக்கு விழுந்து தீப் பிடித்ததில் பரீட்சைக்கு தயார் நிலையில் வைத்திருந்த அனுமதி அட்டை மற்றும் அடையாள அட்டை என்பன தீயில் கருகியுள்ளன.

யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் விஞ்ஞானப் பிரிவு மாணவி ஒருவரே குறித்த அனர்த்தத்துக்குள்ளாகியுள்ளார்.

இதனால் மாணவி மனம் உடைந்த போதும் பெற்றோர் விரைந்து செயற்பட்டு பாடசாலை அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதிபருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து அதிபர் கல்விப் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு மாற்று அனுமதி அட்டை மற்றும் அடையாள அட்டை என்பவற்றை பெற்றுக் கொடுத்துள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி இன்று (ஜனவரி 25) நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.

Share this Article