நெடுந்தீவு றோ.க. மகளிர் கல்லூரியில் நூலக நாடமாடும் சேவை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரியில் இன்றையதினம் வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு கிழக்கு சன சமூக நிலையத்தின் நூல் இரவல் கொடுக்கும் பகுதியான இரகுபதி நினைவு நூலக நடமாடும் சேவை சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

நூலக நடமாடும் சேவையின் போது காட்சிப்படுத்தப்பட்ட நூல்களை கல்லூரியின் முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டதுடன் நூலக அங்கத்தவர்களாக ஆசிரியர்கள் , மாணவர்கள் என 100 பேர் இணைந்து கொண்டு நூல்களையும் பெற்றுச்சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்று(டிசம்பர் 7) முன்னெடுக்கப்பட்ட “வாழ்விற்கான பேரொளி வாசிப்பு” எனும் தொனிப்பொருளிலான நூலக நடமாடும் சேவையின் நோக்கம் எட்டப்பட்டுள்ளதாக நிலைய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Share this Article