நெடுந்தீவு மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் விசமிகளால் தீக்கிரை!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு காளாமுனைப் பகுதியில் கடற்றொழில் செயற்பாடுகளுக்காக தயார் நிலையிலிருந்த மீன்பிடி உபகரணங்கள் தீயிட்டு சேதமாக்கப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை (பெப்ரவரி 22) மீன்பிடி நடவடிக்கைக்காக சென்றவேளை, தமது மீன்பிடி உபகரணங்கள் உட்பட அமைக்கப்பட்ட வாடியும் முற்றுமுழுதாக எரியூட்டப்பட்டிருப்பதைக் கண்டதாகவும் தம்மீதான வெறுப்புணர்வுள்ள விசமிகளால் இவை நாசமாக்கப்பட்டிருக்கலாம் என பாதிக்கப்பட்ட மீனவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த மீன்பிடி உபகரணங்கள் மூவருக்கு சொந்தமானதென்றும் சொத்துக்களின் பெறுமதி ரூபா பதினைந்து இலட்சத்திற்கு மேற்பட்டவை எனவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

 

 

Share this Article