நெடுந்தீவு மாவிலித்துறை றோ. க. த. க. வித்தியாலய ஒளிவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு மாவிலித்துறை றோ. க. த. க. வித்தியாலய ஒளிவிழா- 2023 இன்று (டிசம்பர் 22) காலை பாடசாலை பிரதான மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் யூ. கிறிஸ்சாந்தி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக நெடுந்தீவு மகா வித்தியாலய ஆசிரியர். அருட்பணி சோபன் ரூபஸ் அடிகளார் கலந்து சிறப்பித்தார்.

ஆசிரியர்கள், பாடசாலையின் ஓய்வுநிலை அதிபர், பொலிஸ் உத்தியோகத்தர், அருட்சகோதரிகள், மற்றும் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் , நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

சிறார்களின் கலை நிகழ்வுகள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு அனைவரையும் மகிழ்வூட்டியமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இதேவேளை பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ள புனித சவேரியார் ஆலயத்தில் காலை 7.30 மணிக்கு ஒளிவிழா சிறப்பு திருப்பலி நெடுந்தீவு பங்குத்தந்தை ப. பத்திநாதர் அடிகளாரினால் ஒப்புக்கொடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article