நெடுந்தீவு மத்தி அன்னை திரேசா முதியோர் சங்கத்தின் குடிநீர் விநியோகம் ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மத்தி அன்னை திரேசா முதியோர் சங்கத்தினரால் குடிநீர் விநியோக தாங்கி மூலம் நீர்விநியோக நடவடிக்கை இன்று(ஜனவரி 1) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

Helpage நிறுவனத்தின் உதவியுடன் வழங்கப்பட்ட நீர்த்தாங்கியினை நெடுந்தீவு மத்தி ஐயர் வீட்டு சந்திப்பகுதியில் பொருத்தி அதற்கான முதல்முறை குடிநீரினையும் நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினர் வழங்கி இத்திட்டத்தினை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளனர்.

தொடர்ந்து குடிநீர் விநியோகத்தின் போது 1 லீற்றர் 1 ரூபாவிற்கு வழங்கப்படுவதுடன் பெறப்படும் நிதிமூலம் தொடர்ச்சியாக இத்திட்டம் முதியோர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article