நெடுந்தீவு நேதாமோகனின் கவிதை நூல் வெளியீட்டு விழா நாளை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு நேதாமோகனின் “இலை பெய்யும் காலம்” கவிதை நூல் வெளியீட்டு விழா நாளை (ஜனவரி 4) நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

நெடுந்தீவு பிரதேச கலாசார உத்தியோகத்தர் அ. சிவஞானசீலன் தலைமையில் காலை 10.00 மணி முதல் இடம்பெறவுள்ள நிகழ்வின் முதன்மை விருந்தினராக நெடுந்தீவு பிரதேச செயலர் எவ். சீ. சத்தியசோதி அவர்கள் கலந்து சிறப்பிப்பதுடன் நூலினையும் வெளியிட்டு வைக்கவுள்ளார்.

நூலின் முதற் பிரதியினை நெடுந்தீவு கதிர் பிறைவேற் லிமிற்றட் இயக்குனர் கு. ஜனேந்திரன் பெற்றுக்கொள்வதுடன் , வெளியீட்டு உரையினை நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய அதிபர் அ. பீலிக்ஸ் ஜேக்கப் மேற்கொள்ளவுள்ளார்.

நெடுந்தீவு மகா வித்தியாலய முன்னாள் அதிபர் ஏ. சச்சிதானந்தம் அவர்கள் வாழ்த்துரை வழங்குவதுடன் கிரிஷாந், வே. சிவகரன், வி. ருத்திரன் ஆகியோர் நூல் மதிப்பீட்டுரை ஆற்றவுள்ளனர்.

கவிதை நூல் வெளியீட்டு விழாவில் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Share this Article