நெடுந்தீவு தூய யூதாததேயு ஆலய திருவிழா எதிர்வரும் 26 ஆம் திகதி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு தூய யூதாததேயு ஆலய திருநாள் திருவிழாவானது எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

யூதாததேயு ஆலயத்தின் திருதின வழிபாட்டின் முதல் நாள் வழிபாடுகள் எதிர்வரும் 24 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

புனித ஜோசப்வாஸ் இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வீதியோர சிலுவைப்பாதை தியானமானது அன்றைய தினமே மாலை 04:00 மணிக்கு வெல்லைப் பிரதேசத்தில் ஆலயத்தை சூழவுள்ள பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இரண்டாம் நாள் (மார்ச் 25) வழிபாடுகள் மாலை 5:00 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி திருப்பலியும் தொடர்ந்து நற்கருணை வழிபாடும், ஆசீரும் இடம்பெறவுள்ளது.

திருவிழா திருப்பலி 26 ஆம் திகதி காலை 06:45 மணிக்கு இடம்பெறவுள்ளதுடன் ஞாயிறன்று ஒப்புக்கொடுக்கப்படவுள்ள ஒரேயொரு திருப்பலியும் இதுவாகும்.

திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களின் நலன்கருதி ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பேருந்து சேவையானது 26 ஆம் திகதி காலை 06:00 மணிக்கு மாவிலி துறைமுகத்திலிருந்து ஆரம்பித்து பிரதேசசெயலக முன் வீதியால் திரும்பி ஆலயத்தை சென்றடையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share this Article