நெடுந்தீவு திருப்பாலர்த்துவ சபையில் அங்கத்துவ சின்னஞ்சூட்டு விழா

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் 110 சிறார்கள் திருப்பாலர்த்துவ சபையில் நிரந்தர அங்கத்துவத்தை கடந்த சனிக்கிழமை (பெப்ரவரி 25) பெற்றுக்கொண்டனர்.

நிரந்தர அங்கத்துவத்தை அடையாளப்படுத்தும் விதமாக அவர்களுக்கான சின்னங்கள் சூட்டும் விழா திருப்பலி நெடுந்தீவு தூய யுவானியார் ஆலயத்தில் இடம்பெற்றது.

இந்த திருப்பலியானது திருத்தந்தையின் மறைபரப்பு சபைகளின் யாழ் மறைமாவட்ட இயக்குநரும், பாதுகாவலன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், புனித வளனார் கத்தோலிக்க அச்சகத்தின் பணிப்பாளருமான அருட்தந்தை எஸ்.எயின்சிலி றொஷான் அடிகள் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

Share this Article