நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் கருத்தமர்வு நாளை

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் மறையாசிரியர்கள், கத்தோலிக்க ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மறைப்பாடசாலை மாணவர்களுக்கான கருத்தமர்வானது நாளை (மார்ச் 14) தூய யுவானியார் ஆலயத்தில் இடம்பெறவுள்ளது.

பங்குத்தந்தை வசந்தன் அடிகளாரின் தலைமையிலும் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலிலும் இந்தியா திண்டிவனம் தமிழக ஆயர் பேரவையின் மறைக்கல்வி பணிக்குழு பொது செயலர் அருட்தந்தை ஜோர்ச் சின்னப்பன் அவர்களின் நெறிப்படுத்தலுடனும் இந்தக் கருத்தமர்வுகள் இடம்பெறவுள்ளன.

காலை 9 மணி முதல் நண்பகல் 12:30 மணிவரையில் கத்தோலிக்க ஆசிரியர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வும்

மாலை 3 மணி தொடக்கம் 4 மணிவரையில் மறைப்பாடசாலை மாணவர்களின் பெற்றோருக்கான கருத்தமர்வும்

மாலை 4:30 மணி 6:30 மணிவரையில் மறைப்பாடசாலைகளின் மாணவர்களுக்கான கருத்தமர்வும் இடம்பெறவுள்ளது என்று நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவை அறிவித்துள்ளது.

இந்த அறிவித்தலானது கடந்த ஞாயிறு திருப்பலியின் நிறைவில் வழங்கப்பட்டது.

Share this Article