நெடுந்தீவில் கலை இலக்கிய பரிசளிப்பு விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்துள்ள கலை இலக்கியப் பரிசளிப்பு விழா, மேற்படி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், பிரதேச செயலாளர் எப்.சி. சத்தியசோதி தலைமையில் நாளை மறுதினம்(டிசம்பர் 15) வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

நிகழ்வில் யாழ்.மாவட்டசெயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் இ.கிருஸ்ணகுமார் பிரதம விருந்தினராகவும், ஓய்வு பெற்ற அதிபர் திருமதி சாரதாதேவி கிருஷ்ணதாஸ், நெடுந்தீவு திருக்குடும்ப கன்னியர்மடத்தைச் சேர்ந்த அருட்சகோதரி சுகிர்த செல்வி மற்றும் நெடுந்தீவு கோட்டக் கல்வி அலுவலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி கலைவாணி மோகன்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

விழாவில் கலை நிகழ்வுகளும்,பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளன.

Share this Article