நெடுந்தீவில் இன்றும் நாளையும் நடமாடும் மருத்துவ சேவை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

சுகாதார திணைக்களத்தின் பங்களிப்புடன் நெடுந்தீவு பிரதேசத்தில் நடமாடும் மருத்துவசேவை இன்று (பெப்ரவரி 14) முன்னெடுக்கப்பட்டது. இந்த மருத்துவசேவை நாளையும் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியர்கள், சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்பநல உத்தியோகத்தர்கள் அடங்கிய மருத்துவக் குழு பிரதேசத்தின் அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் இன்று காலை முதல் மருத்துவ சேவைகளை முன்னெடுத்தனர்.

பிரதேசத்தின் 55 வீதமான குடும்பங்கள் இன்று தமது குழுவைச் சந்தித்துள்ளனர் என்றும், மீதமுள்ள குடும்பங்களை நாளை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று பிரதேசத்துக்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர் ஜெனற் ஜான்சன் தெரிவித்தார்.

மருத்துவக் குழுவினர் அனைத்து குடும்பங்களையும் அவரவர் வதிவிடங்களில் சந்தித்து அடிப்டையான சுகாதார பரிசோதனைகள் சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.

Share this Article