நெடுந்தீவு மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று (ஜனவரி 13) நடைபெற்றது.
சாஜிரேடர்ஸ் உரிமையாளர் ராசமாணிக்கம் ரவீந்திரனின் (சுவிஸ்) நிதி அனுசரணையுடன், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி, சமூக நலம் , பண்பாடு, அறப்பணி மையத்தின் தீவகக் கிளை பொறுப்பாளர் கருணாகரன் நாவலன் ஏற்பாட்டில் இவை வழங்கப்பட்டன.
வி.ருத்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கருணாகரன் நாவலன் பொருட்களைக் கையளித்தார்.
இந்த நிகழ்வில் நெடுந்தீவு கிழக்கு கமலாலயம்பதி முருகன் தேவஸ்தான செயளாளரும் நெடுந்தீவு கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க செயலாளருமான உதயகுமார் மதுவண்ணன், நெடுந்தீவு கிழக்கு கமலாலயம்பதி முருகன் தேவஸ்தான பொருளாளரும் முன்னாள் கிராம உத்தியோகத்தருமான கோ.சண்முகலிங்கம் , முன்னாள் கிராம உத்தியோகத்தர் ப.கதிரேசன், நெடுந்தீவு கிழக்கு ஆலமாவன பிள்ளையார் ஆலய பொருளாளர் வே.சுசிதரன், சமாதான நீதிவான்களான இ.தர்மரத்தினம் , மைக்கல் யேசுதாசன் , பயனாசிரியர் தி.பாலசிங்கம் , பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்து கொண்டு மக்களுக்கு பொருட்களைக் கையளித்தனர்.