பாடசாலை நேர மாற்றம்: தினசரி இரண்டு இடைவேளைகள் வழங்க பரிந்துரை

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

புதிய கல்வி சீர்திருத்தங்களின் பகுதியாக, பாடசாலைகளின் நேரம் மற்றும் இடைவேளை நேரங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி, பாடசாலைகள் இனிமேல் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இயங்கும். மேலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, இரண்டு இடைவேளைகளை வழங்கும் திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1 ஆம் திகதி முதல், பாடசாலை நேரம் ஒரு நாளுக்கு 50 நிமிடங்களால் நீடிக்கப்படுவதால், மாணவர்கள் அதனைத் தாங்க இயலாத நிலை உருவாகலாம் எனக் கருதப்படுகிறது. எனவே, தினமும் காலை 10.10 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் மதியம் 12.10 மணி முதல் 12.20 மணி வரை இடைவேளைகள் வழங்கப்பட உள்ளன என தேசிய கல்வி நிறுவனத்தின் உதவி பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசோக்டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், வகுப்புகளுக்கான நேர அட்டவணைகளும் புதியபடி அமைக்கப்பட்டுள்ளன. அவை:

  • காலை 7.40 – 8.30 மணி

  • காலை 8.30 – 9.20 மணி

  • காலை 9.20 – 10.10 மணி

  • காலை 10.30 – 11.20 மணி

  • காலை 11.20 – மதியம் 12.10 மணி

  • மதியம் 12.20 – 1.10 மணி

  • பிற்பகல் 1.10 – 2.00 மணி வரை

என வகுப்புகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

Share this Article