இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியைக் கண்டித்தும், இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைத் தடுக்க வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் குருநகர் மீனவ சங்கத்தின் ஏற்பட்டில் குருநகரில் இன்று காலை (ஜனவரி 13) இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மீனவர்கள் ஊர்வலமாகச் சென்று பல தரப்பினரிக்கும் மனுக்களைக் கையளித்தனர்.

குருநகரில் ஆரம்பித்த இந்த ஊர்வலம் யாழ். நகரப் பகுதியில் உள்ள கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்துக்கும், பின்னர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகம் சென்று மனுக்கள் கைளிக்கப்பட்டது.

Share this Article