நாய்களால் இழுத்துச் செல்லப்பட்ட பச்சிளம் சிசுவின் உடல்! – வடமராட்சியில் அதிர்ச்சி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, வத்திராயனில் பிறந்து சில நாள்களேயான சிசு ஒன்றின் உடல் நாய்களால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிசுவின் உடலை நாய்கள் இழுத்துச் செல்வதைக் கண்ட ஊர் மக்கள் அது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

மருதங்கேணிப் பொலிஸாருக்கு நேற்று (ஜனவரி 2) கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்று சிசுவின் உடலை மீட்டுள்ளனர். சிசுவின் உடல் நாய்களால் இழுத்துச் செல்லப்பட்டுக் காயங்களுடன் காணப்பட்டுள்ளது.

பிறந்த சிசுவை இரகசியமாக புதைத்திருக்கலாம் என்றும், நாய்கள் சிசுவின் உடலை மண்ணைக் கிளறி எடுத்து இழுத்துச் சென்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.

பிறந்து நான்கு நாள்களேயான சிசுவின் உடலே மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் 34 வயதுப் பெண் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

அந்தப் பகுதியில் வீடொன்றில் தங்கியிருந்த பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article