தெல்லிப்பளை பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் இணைந்து நடாத்தும் பண்பாட்டு பெருவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தெல்லிப்பளை பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்தும் பண்பாட்டு பெருவிழா எதிர்வரும் 8 ஆம் திகதி பி.ப 2.00 மணிக்கு தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

தெல்லிப்பளை பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெறும் இவ் விழாவிற்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் பிரதம விருந்தினராகவும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் லாகினி நிருபராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினரகாவும், யூனியன் கல்லூரி அதிபர் தில்லையம்பலம் வரதன் கௌரவ விருந்தினரகாவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

பிரதேசத்தினை சார்ந்த பல கலைஞர்களின் திறமைகள் இவ் நிகழ்வில் அரங்கேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article