திருத்த வேலைக்காக கொண்டு செல்லப்பட்ட நெடுந்தாரகை பயணிகள் படகு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடமாகாண சபையின் ஆளுகைக்குட்பட்ட நெடுந்தீவு பிரதேச சபையின் பொறுப்பில் இருந்த நெடுந்தாரகை பயணிகள் படகு திருத்த வேலைகளுக்காக இன்று (டிசம்பர் 6) காலை நெடுந்தீவை விட்டு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

நெடுந்தாரகை படகினை நெடுந்தீவில் இருந்து வடதாரகை படகு மூலம் கட்டி இழுத்து காங்கேசன்துறை முகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிறுதிருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் திருகோணமலையில் உள்ள படகு கட்டுமான நிறுவனத்திற்கு கொண்டு சென்று முழுமையான திருத்தத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை திருத்தங்களின் பின்னர் பயணிகள் சேவைக்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

Share this Article