தாய்ப்பால் புரைக்கேறி குழந்தை உயிரிழப்பு!- சோகத்தில் குடும்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தாய்ப்பால் புரைக்கேறியதில் பிறந்து 30 நாட்களேயான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் யாழ்ப்பாணம் புத்தூர் நவக்கிரியில் இன்று (ஜனவரி 28) நடந்துள்ளது.

நவக்கிரி மாதா கோவிலடியைச் சேர்ந்த குடும்பம் ஒன்றில் பிறந்த 3 ஆவது குழந்தையே உயிரிழந்துள்ளது.

பால் புரைக்கேறியதும் குழந்தை உடனடியாக அச்சுவேலி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குழந்தையின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாளை குழந்தையின் 31 ஆம் நாள் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் குழந்தையின் உயிரிழப்பு அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share this Article