தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று(பெப்ரவரி 18) யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வும் நேற்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இதன்போது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியிட்டு வைக்க கட்சியின் முக்கியஸ்தரான மாரிமுத்து கணபதிப்பிள்ளை மற்றும் திலகநாதன் கிந்துஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் சட்ட ஆலோசர்களான சட்டத்தரணி சுகாஷ் மற்றும் காண்டீபன் உட்பட கட்சியின் முக்கிய பிரதிநிதிகளும் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Share this Article