ஜெலி மீனின் தாக்குதலால் யாழ்ப்பாணத்தில் ஒருவர் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

ஜெலி மீனின் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 52 வயதான அல்ஜின் ராஜ் என்ற மீனவரே உயிரிழந்துள்ளார்.

இவர் 4 மாதங்களுக்கு முன்னர் பண்ணைப் பகுதியில் இறால் பிடித்துக் கொண்டிருந்தபோது ஜெலி மீனின் தாக்குதலுக்கு இலக்கானார்.

அதன்பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 20 நாள்கள் சிகிச்சை பெற்று இவர் வீடு திரும்பினார். ஆயினும் அவரால் மீண்டும் இயல்பு நிலைக்கு வரமுடியவில்லை.

அவருக்குத் திடீர் சுகவீனங்கள் ஏற்பட ஆரம்பித்திருந்த நிலையில் நேற்று (ஜனவரி 6) வெள்ளிக்கிழமை அவர் உயிரிழந்துள்ளார். ஜெலி மீனின் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article