ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு யாழில் முன்னேற்பாட்டுக் கூட்டம்!!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளைமறுதினம் (பெப்ரவரி 11) சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வுகளின் ஒழுங்கமைப்புகள் தொடர்பிலான முன்னேற்பாட்டுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்ததில் இன்று (பெப்ரவரி 9) இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் யாழ் மாவட்ட செயலர்,வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஜனாதிபதியின் வடக்கு அபிவிருத்திக்கு பொறுப்பான மேலதிக செயலாளர், பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி, யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், முப்படைகளின் பிரதிநிதிகள், பிரதேச செயலர்கள் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Share this Article