கோப்பாயில் விபத்தில் சிக்கிய 3 வாகனங்கள் – பெண்ணெருவர் படுகாயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம், கோப்பாயில் இன்று (ஜனவரி 5) முற்பகல் நடந்த விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து கோப்பாய் கிருஷ்ணன் கோயில் சந்திப் பகுதியில் நடந்துள்ளது. மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணே படுகாயமடைந்துள்ளார்.

கார் ஒன்றும், கன்ரர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுமே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் படுகாயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Share this Article