கல்வியங்காட்டில் வாள்களுடன் கடைக்குள் புகுந்து கொள்ளை! – மூவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் கடை ஒன்றுக்குள் புகுந்து வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதுடன், 5 லட்சம் ரூபாவைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் கடந்த ஜனவரி மாத நடுப்பகுதியில் நடந்துள்ளது.

யாழ்ப்பாணம், கல்வியங்காடு மற்றும் கோப்பாயைச் சேர்ந்த 29, 25, 26 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் நிலையப் பெருங்குற்றப் பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் லக்சாந் தலைமையிலான குழுவினரே சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.

முன்பகை காரணமாகவே இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article