கணவர் இறந்த செய்தி கேட்டு மனைவி உயிர்மாய்ப்பு!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கணவர் மாரடைப்பால் இறந்த செய்தி கேட்ட மனைவி தனக்குத்தானே தீ மூட்டி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு (பெப்ரவரி 11) யாழ்ப்பாணம், 3ஆம் குறுக்குத் தெருவில் நடந்துள்ளது. 61 வயதுடைய செல்வதயாளரூபன் நாகராணி என்பவரே உயிரிழந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் இவரது கணவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அந்தச் செய்தியை தொலைபேசி ஊடாக அறிந்த நாகராணி தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டுள்ளார்.

அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும் சிகிச்சை பயனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமாரன் மேற்கொண்டார்.

Share this Article