கடலில் மாயமான 15 வயதுச் சிறுவன் சடலமாக மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடமராட்சி கிழக்கு, மாமுனைக் கடலில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவன் இன்று (ஜனவரி 31) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நாகர்கோயில் வடக்கைச் சேர்ந்த நந்தகுமாரன் திருமுருகன் என்ற 15 வயதுச் சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 29ஆம் திகதி மாமுனைக் கடலில் நீராடிய சிறுவன் ஒருவர் கடலில் இழுத்துச் செல்லப்பட்டார். மற்றொருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

கடலில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவனைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தபோதும், சிறுவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் சிறுவனின் உடல் இன்று செம்பியன்பற்றுக் கடற்கரையில் ஒதுங்கியுள்ளது.

Share this Article