ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் புதிய ஆண்டுக்கான உறுதியுரை ஏற்கும் நிகழ்வு!!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

புதிய ஆண்டுக்கான உறுதியுரை ஏற்கும் நிகழ்வு இன்று (டிசெம்பர் 2) யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது.

இலங்கைத் தேசியக் கொடி ஏற்றப்பட்டு அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதற்கான கடமை உறுதியுரை அனைத்து உத்தியோத்தர்களாலும் எடுக்கப்பட்டது.

அதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான உறுதியுரை ஏற்கும் நிகழ்வுகள் திணைக்களங்கள், அரச நிறுவனங்களில் இன்று நடைபெற்றன.

யாழ்ப்பாணத்தில் மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உட்பட பல்வேறு அரச திணைக்களங்களில் உறுதியுரை ஏற்கும் நிகழ்வுகள் காலை நடைபெற்றன.

அதேவேளை, ஜனாதிபதி செயலகம் உட்பட நாடு முழுவதும் இன்று பணியிடங்களில் அரச ஊழியர்கள் புதிய ஆண்டுக்கான கடமை உறுதியுரைகளை ஏற்று புதிய ஆண்டுக்கான பணிகளை ஆரம்பித்தனர்.

Share this Article