இரு நாள்கள் நடைபெற்ற சிறுவர் மகிழ்வூட்டும் நிகழ்வுகள்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவில் இரண்டாவது நாளாகச் சிறுவர் கழகக் கலந்துரையாடலும், மகிழ்வூட்டும் நிகழ்வும் நேற்று (பெப்ரவரி 8) நடைபெற்றன.

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் தூய யுவானியார் ஆலய முன்றலில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன. சிறுவர்களுக்கு மகிழ்வூட்டும் விளையாட்டுக்கள் நடத்தப்பட்டதுடன், பரிசில்களும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வை பிரதேசசெயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஆகியோர் நெறிப்படுத்தினர்.

Share this Article