இரண்டரை வயதுக் குழந்தை காய்ச்சலால் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

காய்ச்சல் காரணமாக இரண்டரை வயதுப் பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. மீசாலை கிழக்கைச் சேர்ந்த லவராஜ் ஆர்நிதா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.

கடந்த 5ஆம் திகதி குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பெற்றோர் தனியார் வைத்தியசாலை ஒன்றில் குழந்தைக்குச் சிகிச்சை பெற்றுள்ளனர்.

ஆயினும் பின்னரும் காய்ச்சல் இடையிடையே வந்து சென்ற நிலையில், கடந்த 8ஆம் திகதி காய்ச்சல் அதிகரித்துள்ளது. அதையடுத்து நேற்றுமுன்தினம் (ஜனவரி 8) மாலை குழந்தையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர்.

குழந்தைக்குச் சிகிச்சை வழங்கப்பட்டபோதும், சிகிச்சை பயனின்றிக் குழந்தை உயிரிழந்தது.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.

குழந்தையின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

Share this Article