இடமாற்றலில் செல்லும் யாழ். மாவட்டச் செயலருக்குக் கௌரவிப்பு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பதவி உயர்வுடன் இடமாற்றல் பெற்றுச் செல்லும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் இன்று (டிசெம்பர் 30) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் கௌரவிக்கப்பட்டார்.

யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக செயலாளர் ம.பிரதீபன் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலராகக் கடந்த 3 ஆண்டுகளாகக் கடமையாற்றிய க.மகேசன், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றுச் செல்கின்றார்.

நிகழ்வில் உரையாற்றிய க.மகேசன், யாழ்ப்பாணத்தில் கடமையாற்றக் கிடைத்த சந்தர்ப்பம் தனக்குக் கிடைத்த பாக்கியம் என்று குறிப்பிட்டார்.

Share this Article