யாழ் செல்லும் ஜனாதிபதி! – 8 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செல்லவுள்ள நிலையில் அதற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதி எட்டு பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்  காவல்துறையினரால் நேற்று (ஜனவரி 2) குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு கலந்துரையாடல்களில்  பங்கேற்பதற்காக  எதிா்வரும் 04 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான போராட்டத்தை தடுக்கும் பொருட்டு தடை கட்டளை கோரி காவல்துறையினர் நீதிமன்றில் விண்ணப்பித்துள்ளனர்.

இது தொடர்பில் தங்கள் தரப்பு நிலைப்பாட்டினை நேரடியாகவோ, சட்டத்தரணி ஊடாகவோ யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில், இன்று(ஜனவரி 3) மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு கட்டளையிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் என 8 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Share this Article