தென் ஆபிரிக்காவில் மதுபான விடுதியில் 17 பேர் பலி!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தென் ஆபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க  நகருக்கு தென்மேற்கே அமைந்துள்ள வெடேலா நகர்ப்பகுதியில் உள்ள மதுபான விடுதியொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தில் மேலும் 15 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளை தேடும் தீவிர விசாரணையில் தென் ஆபிரிக்க  பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

சனிக்கிழமை இரவு சுமார் 9:30 அளவில் கௌடெங் மாகாணத்தில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலேயே 13 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் என மொத்தம் 17 பேர் உயிரிழந்ததாக அவசர மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஏகே-47 ரக துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகளுடன் வந்த மர்ம நபர்கள், முதலில் விடுதிக்கு வெளியே மது அருந்திக் கொண்டிருந்த நபர்களை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

பின்னர் விடுதியின் உள்ளே சென்றும் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இத் தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Share this Article
Leave a comment