போக்குவரத்தில் இடர்படும் தீவக மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தீவகக் கல்வி வலயத்தில் போக்குவரத்துப் பிரச்சினைகள் காரணமாக கல்வி அணுகலில் இடர்படும் மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், SJC 87 Trust நிறுவனத்தினால் 10 மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் SJC 87 Trust இன் யாழ் மாவட்ட இணைப்பாளர் சுகிர்தன் அவர்கள் கலந்து கொண்டு, மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டிகளை வழங்கி வைத்தார்.

தொலைதூரப் பகுதிகளிலிருந்து பாடசாலைகளுக்கு பயணிக்கும் மாணவர்களின் போக்குவரத்து இடர்பாடுகளைக் குறைத்து, அவர்களின் தொடர்ச்சியான பாடசாலை வருகைக்கும் கல்வி முன்னேற்றத்திற்கும் இவ்வுதவி பெரும் பங்களிப்பை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு கரம் கொடுத்து, அவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் இவ்வாறான சமூகப் பொறுப்புமிக்க செயற்பாட்டை முன்னெடுத்துவரும் SJC 87 Trust நிறுவனத்தினருக்கு தீவகக் கல்வி வலயத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது

Share this Article
Leave a comment