நெடுந்தீவில் சமுர்த்தி ரன்விமன வீட்டுத்திட்ட வீடு திறந்து வைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி ரன்விமன வீட்டுத்திட்ட வீடு இன்று(டிசம்பர் 29) திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வு நெடுந்தீவு ஜே/05 கிராம அலுவலர் பிரிவில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளரும், நெடுந்தீவு பிரதேச செயலாளருமாகிய F.C.சத்தியசோதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இவருடன் நெடுந்தீவு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. நிவேதிகா கேதீசன் அவர்களும், நெடுந்தீவு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் இ. ராஜ்பவான் அவர்களும், நெடுந்தீவு சமுர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி.கோ.பாமினி அவர்களும், நெடுந்தீவு சமுர்த்தி சமுக அபிவிருத்தி உதவியாளர் திரு.பா.அன்ரன் அமலதாஸ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share this Article