நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் விவசாய செயற்றிட்டத்தின் அறுவடை நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினால் செயற்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் நல்வாழ்வு நம் கையில் எனும் விவசாய செயற்றிட்டத்தின் அறுவடை விழாவானது நேற்றுமுன்தினம் (டிசம்பர் 22) காலை 10 மணியளவில் நெடுந்தீவு மேற்கு கோட்டைக் காட்டுப்பகுதியில் இணைப்பாளர் மு. அமுர்தமந்திரன் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்திகழ்வின் விருந்தினராக நெடுந்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் விவசாய போதனாசிரியர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

ஊரும் உறவுமாக பலர் இந்நிகழ்வில் இணைந்து பங்கு கொண்டமை சிறப்பம்சமாகும். இதேவேளை பொருளாதார நெருக்கடியில் எரிபொருள் விலையேற்றத்தை சாமாளிக்கும் வகையில் ஏர் பூட்டி உழவு செய்யும் செயற்பாட்டினையும் மூத்த விவசாயிகள் அன்றைய தினம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article